Pagetamil
இலங்கை

தலைமுடி ஸ்டைலை சரி செய்த தந்தை: யாழில் 14 வயது சிறுவன் விபரீத முடிவு!

யாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தில் தலைமுடி வெட்டும் விவகாரத்தில் குடும்பத்தினர் கண்டித்ததால் 14 வயதான சிறுவன் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துன்னாலை வடக்கு பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

கடந்த 24ஆம் திகதி பிற்பகல் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவன், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (29) உயிரிழந்தார்.

தினேஷ் ஆதவன் என்ற 14 வயது சிறுவனே உயிரிழந்தார்.

சிறுவன் சிகையலங்கார நிலையம் சென்று. சிகையலங்காரம் செய்து வந்ததாகவும், அவரது சிகையலங்காரம் பாடசாலை மாணவர்களுக்கு உகந்ததல்ல என கண்டித்த தந்தை, மீண்டும் அழைத்து சென்று, மாணவர்களுக்கு உரிய முறையில் சிகையலங்காரம் செய்வித்ததாகவும், இதனால் விரக்தியடைந்த சிறுவன் தவறான முடிவெடுத்ததாகவும் உறவினர்கள் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாலியல் கொடுமை செய்த குற்றச்சாட்டில் பொறுப்பதிகாரி கைது

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

இலங்கைக்கான ருவாண்டா உயர் ஸ்தானிகர் – பிரதமரை சந்திப்பு

east tamil

யு.எஸ்.ஏ.ஐ.டி. நிதியுதவிகள் குறித்த விரிவான விசாரணை அவசியம் – நாமல்

east tamil

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடியேற்றி போராட்டம்

Pagetamil

Leave a Comment