யாழ்ப்பாணம், வடமராட்சி துன்னாலை கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
தனது வீட்டில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுகிறார் என குறித்த பெண் தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, நேற்று (19)மாலை நெல்லியடி பொலிசாரால் அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.
45 வயதான பெண்ணே கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட போது, தனது மார்பு பகுதிக்குள் 6.10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தார்.
அவர் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, நாளை வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதவான் அனுமதியளித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1