ஹந்தான மலைத்தொடரில் காணாமல் போன களனி பல்கலைக்கழகம் மற்றும் ராகம மருத்துவ பீட மாணவர்கள் குழுவினரை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸ் பரிசோதகர் ரசிக சம்பத் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை சுமார் 180 மாணவர்கள் ஹந்தானை மலைத்தொடரில் ஏறுவதற்காக பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
180 மாணவர்களில் சுமார் 150 பேர் கண்டி பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹந்தான மலையிலிருந்து மாலையில் திரும்பும் போது கடும் மழை மற்றும் இருள் சூழ்ந்துள்ளமையினால் மாணவர்கள் வீதியைக் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன ஏனைய மாணவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பொலிஸ் தலைமைப் பொலிஸ் பரிசோதகர் ரசிக சம்பத் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1