26.5 C
Jaffna
February 6, 2025
Pagetamil
சினிமா

‘இந்த சீனெல்லாம் வேணாம்.. ஒத்தபைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும்’: சமுத்திரக்கனி எச்சரிக்கை

‘பருத்திவீரன்’ தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அமீர் குறித்து பேசியதற்கு பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் ஒருபைசா பாக்கி இல்லாமல் பணத்தை திருப்பித் தரவேண்டும் என்றும் இயக்குநர், நடிகர் சமுத்திரக்கனி எச்சரித்துள்ளார்.

’பருத்திவீரன்’ பட சர்ச்சை தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நிலையில் பொதுவெளியில் மன்னிப்பு கேட்குமாறு இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பிரதர்.. இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க வேணாம். நீங்க செய்ய வேண்டியது: எந்த பொதுவெளியில் எகத்தாளமா உக்காந்துக்கிட்டு அருவருப்பான உடல்மொழியால சேற்ற வாரி இரைச்சீங்களோ, அதே பொதுவெளில பகிரங்கமா மன்னிப்பு கேட்கணும். நீங்கக் கொடுத்த அந்த கேவலமான தரங்கெட்ட இன்டெர்வியூவை சமூக வலைதளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும். அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டு போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பி கொடுக்கணும். ஏன்னா.. கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பி கொடுக்க வேண்டியது இருக்கு.

அப்புறம் ‘பருத்திவீரன்’ படத்தில் வேலை பார்த்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம்.. அவங்கல்லாம் எளிய குடும்பத்துலருந்து வந்து பாத்தவங்க.. நீங்கதான் அம்பானி பேமிலியாச்சே…! காலம் கடந்த நீதி.. மறுக்கப்பட்ட நீதி!” இவ்வாறு சமுத்திரக்கனி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்லூரி கதையில் சிலம்பரசன்!

Pagetamil

‘பார்க்கிங்’ இயக்குநருடன் இணையும் சிலம்பரசன்

Pagetamil

இயக்குநர் அருண்குமார் திருமணம்: திரைப் பிரபலங்கள் நேரில் வாழ்த்து

Pagetamil

ஜூனியர் என்.டி.ஆருக்கு நாயகியாக ருக்மணி வசந்த் ஒப்பந்தம்!

Pagetamil

கணவரை பிரிந்தார் அபர்ணா வினோத்!

Pagetamil

Leave a Comment