25.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
இலங்கை

மஹிந்த குழுவின் காட்டுத்தனம்!

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 27(2)இன் கீழ், எதிர்க்கட்சித் தலைவராகிய தான் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் போது, ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபையின் நடுவில் வந்து கேள்வி கேட்பதற்கு இடையூறு விளைவித்தனர் என்றும், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தன்னிடம் இருந்த சகல கேள்விப் பத்திர ஆவணங்களையும் பறித்துக்கொண்டார் என்றும், அந்த கேள்விப் பத்திர ஆவணங்களில் பல முக்கிய பத்திரங்கள் இருப்பதால், அந்த பத்திரங்கள் இல்லாமல் தனது மேற்கொண்ட அலுவல்களை ஆற்ற முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சபாநாயகர் முன்னிலையிலையே பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த குறித்த கேள்விப் பத்திர ஆவணங்களை திருட முற்பட்டதையடுத்து இது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர், இச்செயற்பாடு காரணமாக எதிர்க்கட்சித் தலைவரின் உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுவரை படைக்கலசேவிதரிடம் கிடைக்கப்பெற்றுள்ள பத்திரங்களில் பல முக்கிய பத்திரங்கள் தொலைந்து போயுள்ளன என்றும், இந்த திருட்டில் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமரவிக்ரமவும் பங்கெடுத்துள்ளார் என்றும், இது தொடர்பில் சபாநாயகர் கூட பொறுப்புக் கூற வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டு மக்கள் பட்டினி கிடக்கும் போது, ஆளும் கட்சியின் கள்ளக் கூட்டம் போலவே நாட்டையே வங்குரோத்தாக்கியவர்களின் பிறந்த தின கேக்கை சாப்பிட தான் செல்லவில்லை என்றும், இவர்களுக்கு எதிராக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும்,

காணாமல் போன பத்திரங்கள் அனைத்தையும் மீள வழங்க வேண்டும் என்றும், இச்சம்பவத்தை நளின் பண்டார எம் பி காணொளியாக எடுத்ததால், அது குறித்த சம்பவத்திற்கு ஆதாரமாக உள்ளதாகவும் அவர் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் மிளகாய் தூள் வீசப்பட்ட சம்பவங்கள் கூட வீடியோ பதிவு மூலம்தான் தெரிய வந்துள்ளதாகவும்,எனவே,எந்த நபரின் நடத்தைக்கும் தான் அஞ்சப்போவதில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வவுனியா விபத்தில் யாழ் இளைஞர் பலி

Pagetamil

முன்னாள் சிப்பாய் குடும்பத்துடன் உண்ணாவிரதம்!

Pagetamil

எரிந்த வண்டியிலிருந்தது கோடீஸ்வர வர்த்தகரின் சடலமா?

Pagetamil

மஹிந்த மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் முயற்சியா?; புதிதுபுதிதாக கதைவிடும் ராஜபக்ச குழு: அரசாங்கம் விளக்கம்!

Pagetamil

ஊடகவியலாளரை கடத்த முயற்சி!

east tamil

Leave a Comment