25.5 C
Jaffna
December 29, 2024
Pagetamil
இலங்கை

மீனவர்களுக்கு எச்சரிக்கை!

அந்தமான் நிக்கோபார் தீவுகளை அண்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியை சுற்றியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் இது வடக்கு நோக்கி நகர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு மத்திய வங்கக் கடலில் நவம்பர் 16 ஆம் திகதி காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

10 மற்றும் 19 வடக்கு அட்சரேகைகள் மற்றும் 82 மற்றும் 90 கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு இடைப்பட்ட கடல் பகுதிகளில், காற்றின் வேகம் மணிக்கு 40-45 கி.மீ.,  சில நேரங்களில் மணிக்கு 50-60 கி.மீ ஆகவும் காணப்படும்.

இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படும் என்பதுடன் பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு 10 மற்றும் 19 வடக்கு அட்சரேகைகள் மற்றும் 82 மற்றும் 90 கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகங்கள் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கடற்பரப்புகளில் தற்போது மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மக்கள் உடனடியாக கரையோரப் பகுதிக்கு அல்லது பாதுகாப்பான இடத்திற்கு வருமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போக்குவரத்து விதிமீறல்: 383 சாரதிகள் மீது வழக்கு பதிவு

east tamil

‘மக்களுக்கு எதிராக செயற்பட்ட அரச அதிகாரிகளுடன் போராடிக்கொண்டிருக்கிறோம்’: அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

Pagetamil

மஹிந்தவின் வலது கையிடம் நேற்று: மகனிடம் 3ஆம் திகதி விசரணை!

Pagetamil

இலஞ்சம் வாங்கியபோது மாட்டிய முன்னாள் மாகாணசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்!

Pagetamil

மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது

Pagetamil

Leave a Comment