கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட விமானம் வெடிகுண்டு அச்சத்தால் பயணத்தை இடைநிறுத்தி, பயணிகள் வெளியேற்றப்பட்ட சோதனையிடப்பட்ட சம்பவம் நேற்று (11) பதிவானது.
கழிவறையில் இருந்த கருப்பு பட்டியை, வெடிகுண்டு என நினைத்து இந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டது. அது, இரண்டு கிலோ எடையுள்ள தங்க பார்சல் என வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவினரால் உறுதி செய்யப்பட்டதையடுத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தியன் ஏர்லைன்ஸின் AI-272 விமானம் நேற்று (10) பிற்பகல் 1.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் சென்னைக்கு புறப்படுவதற்கான ஓடுபாதையை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது.
ஆனால், அந்த விமானத்தின் பின்பக்க கழிவறையில் உரிமையாளர் இல்லாமல் கருப்பு நிற பட்டி இருந்ததை பாதுகாப்புப் பணியாளர்கள் குழு கண்டறிந்துள்ளனர்.
அதன்படி, இந்த விமானம் புறப்படாமல் 1.40 மணியளவில் ஓடுபாதையில் இருந்து திரும்பி விமான நிலையத்தை வந்தடைந்தது.
அதன்பின், இந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு விமானம் கொண்டு செல்லப்பட்டு, வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் சோதனை செய்ததில், அந்த பட்டி வெடிகுண்டு அல்ல, தங்கம் மறைத்து வைக்கப்பட்ட பட்டி என்பது உறுதியானது.
அதன் பின்னர், இரண்டு கிலோகிராம் எடையுள்ள தங்க கிரீம் அடங்கிய பட்டி மேலதிக விசாரணைக்காக விமான நிலைய சுங்கப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
இந்த இந்திய விமானம் நேற்று (10) மாலை 4.43 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.