25.5 C
Jaffna
January 13, 2025
Pagetamil
இலங்கை

கடலட்டை பண்ணையாளர்கள் இலட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளனர்!

பூநகரி கிராஞ்சியில் பாரம்பரிய கடற்றொழில் செய்பவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அங்கு கடலட்டை பண்ணைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடலட்டை பண்ணையை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராஞ்சி ஸ்ரீ முருகன் கடற்றொழிலாளர் சங்கத்தின் செயலாளர் த.மகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் கிராஞ்சி பகுதியில் கடலட்டை பண்ணை வழங்க ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களில் சிலர் தமது தவறை உணர்ந்து கடலட்டை பண்ணைக்கு தற்போது விண்ணப்பித்துள்ளனர்.

ஆனால் கடலட்டை பண்ணை போட்டவர்களுக்கு இலட்சக் கணக்கான பணம் இலாபமாக கிடைத்துள்ளது. இதனால் மேலும் பலர் கடலட்டை பண்ணைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

ஆகையினால் பாரம்பரிய கடற்றொழில் செய்பவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அவர்களுக்கும் கடலட்டை பண்ணையை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் வந்து தொழில் செய்வதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால் எமது வளங்கள் பாதிக்கப்படுகிறது. அத்துடன் எமது வளங்களை அள்ளிச் செல்கின்றனர்.

எமது பகுதி மீனவர்களும் இந்திய கடற்பகுதிக்குள் சென்று கடற்றொழிலில் ஈடுபடுவதை ஏற்க முடியாது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இதனையே சொல்கிறார்.

ஆகையினால் தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த காலம் தாழ்த்தாது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முல்லைத்தீவில் வினோதமான திருட்டு

east tamil

UPDATE: ‘மாமா பணத்தை தராததால் மாணவியை கடத்தினேன்’: மச்சான் கூறிய காரணம்!

Pagetamil

ரோஹிங்கிய முஸ்லிம் தொடர்பில் மீள குற்றப்புலனாய்வு விசாரணை

east tamil

தமிழ் மக்களின் போர்க்கால வாழ்க்கையை ஆவணமாக்கியவர் காலமானார்!

Pagetamil

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி மீட்பு: கடத்திய மச்சானும் கைது!

Pagetamil

Leave a Comment