25.1 C
Jaffna
January 4, 2025
Pagetamil
விளையாட்டு

அதகளம் செய்த மக்ஸ்வெல்… ஆப்கானை வீழ்த்தியது அவுஸ்திரேலியா!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பழைய பன்னீர் செல்வமாக வெகுண்டெழுந்துள்ளது அவுஸ்திரேலியா. 7 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் என்ற நிலையில் இருந்து மேற்கொண்டு ஒரு விக்கெட் கூட இழக்காமல் 293 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது அவுஸ்திரேலியா. அதற்கு பிரதான காரணம் மக்ஸ்வெல்லின் அபார ஆட்டம்.

கிட்டத்தட்ட ஆப்கன் அணிக்கு எதிராக ஆட்டத்தை அவுஸ்திரேலியா இழந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. அது நடந்திருந்தால் அரையிறுதிக்கான ரேஸில் ஆப்கன் இருந்திருக்கும். ஆனால், அது அனைத்தையும் மாற்றினார் மக்ஸ்வெல். 128 பந்துகளில் 201 ரன்கள் எடுத்தார். அது பார்க்க பழைய அவுஸ்திரேலிய அணியின் ஆட்டம் போல இருந்தது. இனி இந்தப் போட்டியில் வெல்ல வாய்ப்பே இல்லை என்ற சூழலில் இருந்து வெற்றி பெறுவது போல இந்த ஆட்டம் அமைந்திருந்தது.

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 39வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி களத்தில் போராடி வெற்றியை வசமாக்கி உள்ளது. குறிப்பாக அந்த அணியின் மக்ஸ்வெல் தனி ஒருவராக களத்தில் நின்று ‘பிக் ஷோ’ காட்டி இருந்தார்.

மும்பை – வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ரொஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்தது ஆப்கானிஸ்தான். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஸத்ரான், 143 பந்துகளில் 129 ரன்கள் எடுத்திருந்தார். ரஷித் கான் 35 ரன்கள் எடுத்திருந்தார். ரஹ்மத் ஷா 30 ரன்கள், ஹஷ்மதுல்லா ஷாய்தி 26 ரன்கள், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 22 ரன்கள் மற்றும் ரஹ்மனுல்லா குர்பாஸ் 21 ரன்கள் எடுத்திருந்தனர்.

292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை அவுஸ்திரேலியா விரட்டியது. இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவு இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 91 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது அவுஸ்திரேலியா. டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், டேவிட் வோர்னர், ஜோஷ் இங்லிஸ், லபுஷேன், ஸ்டாய்னிஸ், ஸ்டார்க் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

அந்த சூழலில் அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 201 ரன்கள் தேவைப்பட்டது. கையில் இருந்தது 3 விக்கெட்கள். களத்தில் ஆஸி.க்கு நம்பிக்கை அளித்த ஒரே பேட்ஸ்மேன் மக்ஸ்வெல். அவர் அதனை வீண் போக செய்யவில்லை. 128 பந்துகளில் 201 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார். 21 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். நூர் அகமது வீசிய 21.5-வது ஓவரில் மக்ஸ்வெல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை மிஸ் செய்தார் முஜீப். அது ஆப்கன் அணியின் வெற்றியை பறித்தது.

தசை பிடிப்பு காரணமாக களத்தில் கால்களை நகர்த்த முடியாமல் தவித்தார் மக்ஸ்வெல். ஒரு கட்டத்தில் அப்படியே முடியாமல் படுத்தும் விட்டார். இருந்தும் அதை பொறுத்துக் கொண்டு அபாரமாக ஆடி அதகளம் செய்தார். இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலியா நடப்பு உலகக் கோப்பை தொடரில் 3வது அணியாக அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. மக்ஸ்வெல் மற்றும் கம்மின்ஸ் இணைந்து 202 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

“இதை எப்படி விவரிப்பது என்று எனக்கு தெரியவில்லை. இது மிகப்பெரிய வெற்றியாகும். மக்ஸ்வெல் அபாரமாக ஆடி இருந்தார். அமைதியாக இருந்தார். அவர் வசம் எப்போதும் ஒரு திட்டம் இருக்கும். 200 ரன்கள் பின்தங்கி இருந்த போதும் ஆட்டத்தில் வெல்ல முடிந்தது அசாத்திய நிகழ்வு. தசை பிடிப்பு காரணமாக மேக்ஸ்வெல் திரும்பினால் எங்களுக்கு சில ஆப்ஷன் இருந்தது. ஸாம்பா தயாராக இருந்தார். ஆனால், மக்ஸ்வெல் வெளியேறவில்லை. எந்த சூழலில் இருந்தாலும் வெல்ல முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. நாங்கள் அரையிறுதிக்கு முன்னேறியது அபாரம்” என ஆட்டத்துக்கு பிறகு கம்மின்ஸ் தெரிவித்தார். 68 பந்துகளை எதிர்கொண்ட அவர் வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார் மக்ஸ்வெல்.

“நாங்கள் ஃபீல்ட் செய்த போது வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்தது. வெப்பத்தால் நான் அதிகம் உடற்பயிற்சி செய்யவில்லை. சரிவில் இருந்த போதும் பொசிட்டிவ் மைண்ட்செட்டில் இருந்தேன். எங்களது பேட்டிங் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நினைத்தேன். அதே நேரத்தில் எனது வழக்கமான ஷாட்களை ஆட வேண்டும் என்ற முடிவில் இருந்தேன். சான்ஸே இல்லாத இந்த இன்னிங்ஸை ஒரு சான்ஸ் எடுத்து பார்த்து ஆடியதில் மகிழ்ச்சி. அது எனக்கு பெருமையாக உள்ளது. எங்கள் அணிக்கு நம்பிக்கை அதிகம். இந்த ஆட்டத்தின் மூலம் அது மேலும் உயர்ந்துள்ளது” என மக்ஸ்வெல் தெரிவித்தார்.

128 பந்துகளில் 201 ரன்களை மக்ஸ்வெல் குவித்தார். இதன் மூலம் பல்வேறு சாதனைகளை அவர் படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர், உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்களை பதிவு செய்துள்ள வீரர்களில் 3வது இடம் (இதுவரை 43 சிக்ஸர்), ஒருநாள் கிரிக்கெட்டில் இலக்கை விரட்டிய போது அதிக ரன்கள் குவித்தவர், உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் 3வது இடம் போன்ற சாதனைகளை அவர் படைத்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

21ஆம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்!

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் இந்திய வீரர் அஸ்வின்!

Pagetamil

வெற்றியுடன் டிம் சவுதிக்கு பிரியாவிடை கொடுத்த நியூசிலாந்து!

Pagetamil

Leave a Comment