கடும் மழை காரணமாக பத்கொடவில் மண்சரிவு மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதனால், கொழும்பு – பதுளை பிரதான வீதி இன்று (7) மாலை நான்கு மணியளவில் முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனவே, மாற்று வழிகளை பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மாற்றுப் பாதைகளாக, கிராவணகம ஊடாக ஹலதுதென்ன ஊடாக மன் தன்ன பெரகல பாதை, கிராவணகம ஊடாக நிக்பொட வெல்லவாய பாதை, பண்டாரவளை வெலிமடை ஊடாக எல்ல வெல்லவாய பாதை மற்றும் கொழும்பு பாதை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மண்சரிவை அடுத்து வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டமையால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. வாகன நெரிசலை குறைக்கும் செயற்பாடுகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மண் சரிவுகள் சேறும் சகதியுமாக ஓடுவதால், வீதியை சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
எனவே மாற்று வழிகளை பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.