25.4 C
Jaffna
December 29, 2024
Pagetamil
இந்தியா

தூத்துக்குடி காதல் தம்பதி கொலை: பெண்ணின் தந்தை உட்பட 4 பேர் கைது

தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த 3வது நாளில் புதுமணத் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தந்தை உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்பெண்ணின் தந்தை முத்துராமலிங்கம், திருவிக நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கி ராஜா, சங்கர் காலனியைச் சேர்ந்த மாரியப்பன் ஆகியோரை காவல் துறை கைது செய்துள்ளது. இவர்கள் தவிர 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர் ஒருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளதை எஸ்.பி.பாலாஜி சரவணன் உறுதி செய்துள்ளார். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை தேடிவருவதாகவும் எஸ்பி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் தூத்துக்குடி முருகேசன் நகர் 1வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் மாரிசெல்வம் (24). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலைபார்த்து வந்தார். இந்நிலையில், மாரிசெல்வமும், தூத்துக்குடி திருவிக நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகா (20) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கார்த்திகா பட்டப் படிப்பு முடித்துள்ளார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது காதலுக்கு கார்த்திகா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதையடுத்து, கடந்த 30ஆம் தேதி கார்த்திகாவை அழைத்துக் கொண்டு கோவில்பட்டிக்கு சென்ற மாரிசெல்வம், கிழக்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். பின்னர், கோவில்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் கோவில்பட்டியிலேயே தங்கி இருந்தனர். திருமணமாகி 3 நாட்களுக்குப் பிறகு நேற்று காலையில் காதல் தம்பதி தூத்துக்குடி முருகேசன் நகரில் உள்ள மாரிசெல்வத்தின் வீட்டுக்கு வந்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் பெற்றோர் வேலைக்குச் சென்று விட்டனர். புதுமணத் தம்பதியர் இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.

அப்போது, 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து, மாரிசெல்வம், கார்த்திகா ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலைசெய்துள்ளனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜிசரவணன், ஏடிஎஸ்பி கார்த்திகேயன், ஊரக டிஎஸ்பி சுரேஷ், சிப்காட் காவல் ஆய்வாளர் சண்முகம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, மாரிசெல்வம், கார்த்திகா ஆகியோரது உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தக் கொலை வழக்கை சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலித்து திருமணம் செய்துகொண்ட 3 நாட்களில் புதுமணத் தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு

Pagetamil

நெரிசலில் உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு ‘புஷ்பா’ படக்குழு சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி

Pagetamil

“என்னை நானே சாட்டையால் அடித்துக் கொள்வேன், செருப்பு அணிய மாட்டேன்!” – அண்ணாமலை கொந்தளிப்பு

Pagetamil

தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல் சம்பவம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Pagetamil

3 கணவர்களிடமும் இயற்கைக்கு மாறான உறவு குற்றச்சாட்டு: பெண் கைது!

Pagetamil

Leave a Comment