தூக்கத்திலிருந்த கணவனின் ஆணுறுப்பை பாக்குவெட்டியினால் வெட்டிய மனைவி

Date:

இராணுவ வீரரான தன்னுடைய கணவனின் அந்தரங்க உறுப்பை பாக்குவெட்டியினால் வெட்டி பலத்த காயங்களை ஏற்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது​ செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது மனைவி 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுர பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதவானுமாகிய நாலக சஞ்ஜீவ ஜயசூரியவே இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரான பெண்ணை அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் மனநல வைத்தியரிடம் முன்னிலைப்படுத்துமாறும், உரிய மருத்துவ அறிக்கையை எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் பிரதான நீதவான் பொலிஸாருக்கு மேலும் உத்தரவிட்டார்.

பகலில் தனது கணவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது சந்தேக நபர் அவரது ஆணுறுப்பை கத்தியால் அறுத்து பலத்த காயம் அடைந்தார். பின்னர் காயமடைந்தவர் 1990 சுவாசரி அம்புலன்சில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்