25.6 C
Jaffna
December 23, 2024
Pagetamil
இலங்கை

தாதியர்களின் ஓய்வு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு!

அரச தாதியர் சேவையில் தரம் நான்கு தாதியர்களை 60 வயதில் கட்டாயமாக ஓய்வுபெறச் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், ஏற்கனவே ஓய்வு பெற்ற அந்தந்த பதவிகளில் உள்ளவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தரம் ஒன்று சேவை, முதுநிலை சேவை, சிறப்பு தர சேவை மற்றும் நிர்வாக தரம் ஆகியவற்றில் பணியாற்றும் தாதியர்களின் ஓய்வு வயதை 63 ஆக நீட்டிக்கவும் பெஞ்ச் முடிவு செய்துள்ளது.

தாதியர்கள் 60இல் ஓய்வு பெறுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்கிய ஆவணங்கள் செல்லாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அரசாங்க சேவை ஐக்கிய தாதியர் சங்கம், முருத்தெட்டுவே ஆனந்த தேரர், தாதி உத்தியோகத்தர் புஷ்பா ரம்யலதா டி சொய்சா மற்றும் பலர் தாக்கல் செய்திருந்த 60 வயது கட்டாய ஓய்வு தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணையின் போது முன்வைக்கப்பட்ட உண்மைகளை ஆராய்ந்த நீதிமன்றம், அரச ஊழியர்களுக்கு 60 வயதில் ஓய்வு வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம், தாதியர்களின் ஓய்வு காரணமாக சுகாதாரத் துறையில் மூத்த தாதியர்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டதையும், அதன்படி, 2023ஆம் ஆண்டு  மார்ச் 31 முதல் ஆறு மாதங்களில் 1,000 தாதியர் பணியிடங்கள் காலியாக உள்ளதை பெஞ்ச் கவனித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயிற்சி பெற்ற மூத்த தாதியர்கள் பணி ஓய்வு மற்றும் புலப்பெயர்வு காரணமாக இந்த பணி வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், பயிற்சி பெற்ற மற்றும் மூத்த தாதியர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகளில் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது சுகாதாரத் துறையில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என்று தீர்ப்பு கூறுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

24வது ஆண்டில் மிருசுவில் படுகொலை

east tamil

யாழ் மாவட்டத்துக்கு வெளியில் கடமையாற்றாத ஆசிரியர்களுக்கு விரைவில் இடமாற்றம்!

Pagetamil

முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பு நீக்கம்

east tamil

தனங்கிளப்பில் தாறுமாறாக தறிக்கப்படும் பனைகள்: சாவகச்சேரி பொலிசார் ‘பம்மி’யதன் பின்னணி என்ன?

Pagetamil

பாடசாலை ஆரம்பிக்கும் திகதி பற்றிய அறிவிப்பு

Pagetamil

Leave a Comment