Pagetamil
இலங்கை

244 குடும்பங்கள் இடம்பெயர்வு

கொஸ்லந்த மீரியபெத்த பழைய மண்சரிவு பகுதி மற்றும் அதனை அண்மித்த பிரதேசத்தின் இருபுறமும் உள்ள 244 குடும்பங்கள் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரையின் பிரகாரம் உடனடியாக அவர்களின் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதாக ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் கே.ஜே.பிரியங்கிகா தெரிவித்தார்.

கொஸ்லந்த மீரியபெத்தவை சேர்ந்த நூற்று நாற்பத்து நான்கு குடும்பங்கள் கொஸ்லந்த தேயிலை தொழிற்சாலைக்கும், மஹகந்தவில் இருபத்தி மூன்று குடும்பங்கள் மல்வண்ண தேயிலை தொழிற்சாலைக்கும், திபுல்கசமுல்லவை கொஸ்லந்த சிங்கள கல்லூரிக்கும், கொஸ்லந்த தமிழ் கல்லூரிக்கும் 81 குடும்பங்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இரவு வேளைகளில் யானைகள் சுற்றித் திரிவதால், மஹகந்த வத்தை பகுதியில் உள்ள குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதில் சிறு தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்த நிவாரண அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முகாம்களில் தற்போது 768 பேர் இருப்பதாக ஹல்துமுல்ல பிரதேச செயலாளர்  மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வவுனியா விபத்தில் யாழ் இளைஞர் பலி

Pagetamil

முன்னாள் சிப்பாய் குடும்பத்துடன் உண்ணாவிரதம்!

Pagetamil

எரிந்த வண்டியிலிருந்தது கோடீஸ்வர வர்த்தகரின் சடலமா?

Pagetamil

மஹிந்த மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் முயற்சியா?; புதிதுபுதிதாக கதைவிடும் ராஜபக்ச குழு: அரசாங்கம் விளக்கம்!

Pagetamil

ஊடகவியலாளரை கடத்த முயற்சி!

east tamil

Leave a Comment