வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியமுள்ள சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.
மின்னலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை மரங்களுக்கு அடியில் தஞ்சம் அடைய வேண்டாம், வீட்டிற்குள் இருக்குமாறு எச்சரித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது திறந்தவெளி பகுதிகளான நெல் வயல்கள், தேயிலை தோட்டங்கள் மற்றும் திறந்தவெளி நீர்நிலைகளை தவிர்க்கவும், இடியுடன் கூடிய மழையின் போது கம்பியில் இணைக்கப்பட்ட தொலைபேசிகள் மற்றும் இணைக்கப்பட்ட மின்சார உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.