Pagetamil
இந்தியா

தமிழகத்தில் கரையொதுங்கிய இலங்கை மர்மப்படகில் சென்றது யார்?

தமிழகத்தின் மண்டபம் அருகே இலங்கை பைபர் படகை விட்டு விட்டு தப்பி ஓடிய இரண்டு நபர்கள் கடத்தல்காரர்களா, சமூக விரோதிகளா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

நேற்றைய தினம், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே முனைக்காடு கடற்கரை பகுதியில் சந்தேகத்துக்கிடமாக இலங்கை பைபர் படகை விட்டு விட்டு மர்ம நபர்கள் இரண்டு பேர் தப்பி ஓடியதாக அப்பகுதி உள்ள மீனவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்

இதை அடுத்து அப்பகுதிக்கு சென்று போலீசார் இலங்கை படகை மீட்டு கடல்காரர்கள் யாரேனும் வந்தார்களா அல்லது சமூக விரோதிகள் யாரேனும் வந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படகில் இருந்து 2 பேர் அதி வேகமாக தப்பித்து சென்றதாக அப்பகுதியில் உள்ள மீனவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏற்கனவே மர்ம நபர்கள் தப்பி சென்ற பகுதி கடத்தல் தங்கம், கஞ்சா உள்ளிட்ட கடத்தல் நடைபெறும் பகுதியாக உள்ளதால் வந்தவர்கள் கடத்தல் காரர்களாக இருக்கக்கூடும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சயிப் அலி கானை கத்தியால் குத்தியவர் கைது: சிக்கியது எப்படி?

Pagetamil

இந்திய தேர்தல் குறித்து மன்னிப்பு கோரிய மெட்டா நிறுவனம்!

east tamil

“கூத்தாடி என்ற கூற்றை உடைத்தவர் எம்ஜிஆர்” – தவெக தலைவர் விஜய் உருக்கம்

Pagetamil

புலிப்பூச்சாண்டி வேண்டாம்: பழ.நெடுமாறனின் விண்ணப்பத்தை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

குடிபோதையில் மணமகனின் மோசமான செயல்

east tamil

Leave a Comment