25.3 C
Jaffna
December 26, 2024
Pagetamil
தமிழ் சங்கதி

‘முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு ஆங்கில புலமை குறைவு’: விக்னேஸ்வரன் கூறியதன் விரிவான பின்னணி!

முல்லைத்தீவு முன்னாள் நீதிபதி ரி.ஆனந்தராஜாவுக்கு மொழிப் பிரச்சினை இருந்திருக்கலாம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் பேட்டியொன்றில் கூறியதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதிலும் ஒரு சாரர், விக்னேஸ்வரன் அரசாங்கத்தின் ஆள் என்றும் தீர்மானித்து விட்டனர்.

இந்த தகராறிற்குள் நாம் செல்லவில்லை. விக்னேஸ்வரன் சொன்ன தகவல், அதன் பின்னணி பற்றிய சில விடயங்களை மட்டும் இதில் குறிப்பிடுகிறோம்.

விக்னேஸ்வரன் இந்த கருத்தை கூறுவதற்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் அவசர சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போதுதான், யாழ்ப்பாணத்தில் 4ஆம் திகதி மனிதச்சங்கிலி போராட்டம் நடத்துவது என்ற தீர்மானத்துக்கு வந்திருந்தனர்.

இந்த சந்திப்பிற்கு முன்னதாக, நீதிபதி ரி.சரவணராஜா பற்றிய பின்னணியெதுவும் க.வி.விக்னேஸ்வரனுக்கு தெரிந்திருக்கவில்லையென்பதற்குத்தான் வாய்ப்புக்கள் அதிகம். ஏனெனில், அந்த சந்திப்பின் போதுதான், சரவணராஜாவுக்கு ஆங்கிலப் புலமை குறைவு என்ற தகவலை விக்னேஸ்வரன் முதன்முதலில் அறிந்திருந்தார்.

அந்த தகவலை கூட்டத்தில் கூறியவர், இன்னொரு கட்சியை சேர்ந்தவர். அவர் யார் என்பதை நாம் குறிப்பிடவில்லை. வாசகர்களின் ஊகத்துக்கே விட்டுவிடுகிறோம்.

அவர் அப்படி கூறியதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது, அந்த தகவலை கூறியவர், நீதிபதி சரவணராஜாவை அறிந்தவர்.

மற்றையது, நீதிமன்ற தீர்ப்பை மாற்றும்படி சட்டமா அதிபர் மிரட்டினார் என்ற தகவலின் பலவீனமான தர்க்க வலு. நீதிபதி வழங்கிய தீர்ப்பை, அந்த நீதிபதி விரும்பினால் கூட மாற்ற முடியாது என்ற நிலைமையில், தீர்ப்பை மாற்றும்படி சட்டமா அதிபர் வற்புறுத்தியிருக்க வாய்ப்பில்லை. சட்டமா அதிபர்  நட்புரீதியாக கூறியதை அல்லது ஏதாவது ஒரு வசனத்தை சரவணராஜா தவறாக அர்த்தம் கற்பித்திருக்கக்கூடும் என்ற தொனிப்பட அந்த பிரமுகர், அன்றைய கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அப்போதே, விக்னேஸ்வரன் ஆச்சரியமாக அந்த தகவல்களை கேட்டுக் கொண்டிருந்தார். அதை ஆச்சரியமாக கேட்டுக் கொண்டதுடன், பின்னர் பகிரங்கமாக- தனது கருத்தாக- கூறியும் விட்டார்.

இப்பொழுது இந்தக் கருத்துக்கு சொந்தக்காரர் விக்னேஸ்வரனே. சரவணராஜாவை பேரினவாதிகள் துப்பாக்கி முனையில் விரட்டி விட்டார்கள் என சமூக ஊடகங்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கையில், கூட்டத்தில் இன்னொருவர் சொன்னதை, தனது கருத்தாக கூறி, விக்னேஸ்வரன் சிக்கிக் கொண்டுள்ளார்.

இது பற்றி யாராவது விக்னேஸ்வரனிடம் கேட்டால், அந்த கூட்டத்தில் ….. அப்படி சொன்னார், அதைத்தான் நான் சொன்னேன் என்று கூட இனிமேல் விக்னேஸ்வரன் விளக்கம் அளிக்க முடியாது. ஏன் உங்களுக்கு சொந்தக்கருத்து இல்லையா என்று கேட்பார்கள்.

இந்த இடத்தில் விக்னேஸ்வரனின் இயல்பொன்றை பற்றியும் குறிப்பிட வேண்டும். அரசியல்ரீதியான முடிவுகள் எடுக்கும் சந்தர்ப்பங்களில், அவர் யாருடன் இறுதியாக கதைக்கிறாரோ, அவர்களின் செல்வாக்கிற்கு உட்பட்டு விடுவார் என்ற அபிப்பிராயம் உள்ளது. இது நீண்டகாலமாக அவருடன் இரத்தமும் சதையுமாக அரசியல் செய்பவர்களின் கருத்து.

கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில், அவர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்திருக்க வேண்டியவர். சிவராம் கொலையுடன் அந்த கூட்டணியின் செயலாளருக்கு தொடர்பு இருக்கிறது என, கடைசி நேரத்தில் அவருக்கு யாரோ தவறான தகலொன்றை கொடுத்து விட்டார்கள். (சிவராம் கொலையின் பின்னணி பற்றி சில வருடங்களின் முன்னர் தமிழ்பக்கம் விரிவான தகவல்களை உள்ளடக்கிய கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தது) விக்னேஸ்வரன் அந்த தவறான தகவலை நம்பி, அடம்பிடிக்க ஆரம்பித்து விட்டார்.

கூட்டணி பேச்சுக்கு வந்த கட்சி தலைவர்களுடன் பேசுவதும், சம்மதிக்கும் நிலைமைக்கு வருவதும், பின்னர் எழுந்து சென்று பக்கத்திலுள்ள அறைக்குள் பிறிதொருவருடன் கலந்துரையாடி விட்டு, பரோட்டா சூரி பாணியில், முதலில் இருந்து பேச தொடங்குவதுமாக இருந்த அவரது நடத்தை பற்றி அந்த சமயத்திலேயெ தமிழ்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

சரவணராஜாவுக்கு ஆங்கில புலமை இருக்கிறதோ இல்லையோ, தமிழ் அரசியல்வாதியாக இருப்பதென்றால் விக்னேஸ்வரன் இன்னும் சூட்சுமங்களை படிக்க வேண்டும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உட்கட்சி மோதல் உச்சம்… 4வது வழக்கில் மத்தியகுழு முடக்கப்படலாம்: இலங்கை தமிழ் அரசு கட்சி ஸ்தம்பிக்கும் நிலை!

Pagetamil

மாவை கட்சியின் தலைவரா?… இல்லையா?: 5 மணித்தியாலங்கள் மல்லுக்கட்டியும் தமிழரசு மத்தியகுழுவில் முடிவில்லை!

Pagetamil

தேர்தல் தோல்வியுடன் சங்கு அணியில் குழப்பம்: 3 சிறிய கட்சிகளை வெளியே அனுப்ப முயற்சி!

Pagetamil

உட்கட்சி மோதலால் திண்டாடும் ரெலோ!

Pagetamil

சந்திக்கு வருகிறது உள்வீட்டு மோதல்: ரெலோவும் நீதிமன்ற படியேறுகிறது!

Pagetamil

Leave a Comment