25.2 C
Jaffna
January 14, 2025
Pagetamil
இலங்கை

ஜேர்மன் ஊடக நேர்காணலில் ரணில் பதற்றம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கத்திய ஊடகங்கள் இலங்கையை இரண்டாம் தர நாடாக கருதுவதாக சாடியதுடன், ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான சர்வதேச விசாரணையை நிராகரித்தார்.

ஜேர்மனியின் Duetsche Welle DW நியூஸ் ஏஜென்சியின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, “அது வெளியில் உள்ளது” என்று கூறும் எந்தவொரு பிரச்சினையிலும் இலங்கைக்கு சர்வதேச விசாரணை இருக்காது என்று கூறினார்.

“ஜேர்மனிக்கு அப்படியான விசாரணைகள் இல்லை, பிரிட்டனுக்கு அத்தகைய விசாரணைகள் இல்லை, அவர்கள் என்ன சர்வதேச விசாரணைகளுக்குச் சென்றார்கள்? அது ஏன் இலங்கையர்களுக்கும் ஆசியர்களுக்கும்? நாங்கள் இரண்டாம் தரம் என்று நினைக்கிறீர்களா?” விக்கிரமசிங்க தெரிவித்தார்.

“இந்த மேற்கத்திய மனோபாவத்தை நீங்கள் அகற்ற வேண்டும். மேற்கத்திய ஊடகங்கள் எங்களை மோசமானவர்கள் என்று நினைக்கின்றன. இலங்கைப் பணியாளர்களைப் பயன்படுத்தி நாங்கள் விசாரணை நடத்துவதுதான். நீங்கள் கர்தினாலின் ஒரு துண்டு காகிதத்தை எடுத்து இங்கே படிக்கிறீர்கள். கத்தோலிக்க பிஷப்பிடம் பேசியதா? இல்லை என்றால் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்க உங்களுக்கு உரிமை இல்லை. இந்தக் கேள்விகளை என்னிடம் கேட்க நீங்கள் இங்கு வரவில்லை. என்னை மூலை முடுக்கத்தான் இங்கு வந்தீர்கள்ஹ என்று விக்கிரமசிங்க அந்த ஊடகவியலாளரை கடுமையாக சாடினார்.

“இந்த மேற்கத்திய மனோபாவத்தை வெளியே எடுங்கள். இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச விசாரணைகள் இல்லை” என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். நீங்கள் நிறுத்துங்கள். நான் அதை நிறுத்துகிறேன். நீங்கள் உங்கள் வீட்டு வேலைகளை சரியாக செய்யவில்லை. ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் இங்கு வந்து நாங்கள் மனித உரிமைகளை மீறுகிறோம் என்று சொல்லுங்கள். நான் உடன்படவில்லை.” என ரணில் பதற்றத்துடன் பேசினார்.

இந்த பேட்டியில் ரணில் வழக்கத்துக்கு மாறாக பதற்றத்துடன் காணப்பட்டார். அவரது உடல்மொழியும், “நானும் ரௌடிதான்“ பாணியில் வலிந்து ஒரு பிம்பத்தை உருவாக்க முயன்றதை காண்பித்தது.

இதேவேளை, மேற்கு ஊடகங்கள் இலங்கையை இரண்டாம் தர நாடாக கருதுகிறீர்களா என்ற ஜனாதிபதியின் கேள்வி அர்த்தமற்றது என சமூக ஊடகங்களில் பலரும் குறிப்பிட்டு வருகிறார்கள். அங்கு ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலே, நீதியான விசாரணைக்கு ஆவண  செய்யப்படும். ஆனால் இலங்கையில் இரண்டு கட்சிகளும் ஊழல்வாதிகளை மாறிமாறி காப்பாற்றி, நாட்டை குட்டிச்சுவராக்கியுள்ளதாகவும், அதனால் மேற்கு ஊடகங்கள் அவ்வாறுதான் பார்க்கும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரயிலில் தவறவிடப்பட்ட பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

east tamil

முல்லைத்தீவில் வினோதமான திருட்டு

east tamil

UPDATE: ‘மாமா பணத்தை தராததால் மாணவியை கடத்தினேன்’: மச்சான் கூறிய காரணம்!

Pagetamil

ரோஹிங்கிய முஸ்லிம் தொடர்பில் மீள குற்றப்புலனாய்வு விசாரணை

east tamil

தமிழ் மக்களின் போர்க்கால வாழ்க்கையை ஆவணமாக்கியவர் காலமானார்!

Pagetamil

Leave a Comment