‘சிறுவர்களுக்கு இரக்கம் காட்டாதவர்களும் பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தாதவரும் நம்மை சார்ந்தவர் அல்லர்’
என்ற நபிமொழியின் தொனிப்பொருளில் ஒக்டோபர் மாதம் 2023 ஜ முன்னிட்டு இன்று (1) சர்வதேச சிறுவர், முதியோர் தின நிகழ்வுகள் ஏறாவூரில் சிறப்பாக நடைபெற்றது.
ஏறாவூர் சமூகநலன் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் மட்டக்களப்பு மத்தி உதவிக் கல்விப்பணிப்பாளருமான ஏ.எம்.முபாஸ்தீன் தலைமையில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் பல்வேறுபட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. இதன்போது வைத்தியசாலையின் மருத்துவ நலன் தேவைகருதி ஒரு தொகுதி மருந்துப்பொருட்க்கள்,விடுதிகளுக்கு சுவர் கடிகாரங்கள் மற்றும் விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கான அன்பளிப்பு பொருட்க்கள் என்பன சமூக நலன் அபிவிருத்தி ஒன்றியத்தின் உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களான ஏ.எல்.எவ்.பஜீரியா, எஸ்.எம்.பிர்ணாஸ்,பாறுக்மௌலவி, ஆகியோர்களுடன் சமூக நலன் அபிவிருத்தி ஒன்றியத்தின் உப தலைவர் ஜ.எம்.தசீர்,செயலாளர் ஏ.ஆர்.எம்.பசீர் ஆலோசகர் அல்ஹாஜ் ஜ.எம்.ஜெமில் உட்பட ஒன்றிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
-க.ருத்திரன்-