25.4 C
Jaffna
December 24, 2024
Pagetamil
இலங்கை

மின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி கோருகிறது மின்சாரசபை!

மின்சார கட்டணத்தை அதிகரிக்க அனுமதிக்குமாறு இலங்கை மின்சார சபை மீண்டும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர், கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.

இவ்வருடம் எதிர்பார்த்த அளவு நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போனதால் மின்சார உற்பத்திக்கு கூடுதல் செலவு ஏற்படுவதாகவும், இந்த கூடுதல் செலவுகளை ஈடுகட்ட பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்சார சபையின் பொது முகாமையாளர் நரேந்திர சில்வா தெரிவித்தார். .

இந்த ஆண்டு நீர்மின்சாரத் திறன் 4500 ஜிகாவாட் மணிநேரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3750 ஜிகாவாட் மணிநேரமே எடுக்க முடியும் என பொது மேலாளர் தெரிவித்தார்.

இதன் காரணமாக அனல் மின் நிலையங்களில் இருந்து 750 கிகாவாட் மணிநேரம் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

இது தொடர்பான விரிவான தரவுகளை எதிர்வரும் திங்கட்கிழமை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்க மின்சார சபை தீர்மானித்துள்ளது.

மின் உற்பத்திக்கான அதிக செலவு காரணமாக கடந்த காலங்களில் பல தடவைகள் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டது.

அரச, நிர்வாக ஊழல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சேவைகள், துறைகளில் ஏற்பட்டுள்ள கட்டண அதிகரிப்பினால் மக்கள் வாழ முடியாமல் திண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட பாதாள உலக தலைவர்கள் கடல் வழியாக தப்பிச் சென்றனரா?

Pagetamil

புகையிரதத்தை பற்றி எதுவுமே தெரியாது… தண்டவாளத்தில் புகைப்படம் எடுத்த போது தாயும் மகளும் உயிரிழந்த சம்பவத்தில் அதிர்ச்சி வாக்குமூலம்!

Pagetamil

24வது ஆண்டில் மிருசுவில் படுகொலை

east tamil

யாழ் மாவட்டத்துக்கு வெளியில் கடமையாற்றாத ஆசிரியர்களுக்கு விரைவில் இடமாற்றம்!

Pagetamil

முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பு நீக்கம்

east tamil

Leave a Comment