25.8 C
Jaffna
December 25, 2024
Pagetamil
இலங்கை

பயங்கரவாதம் தொடர்பான சட்டங்கள் தேவையற்றவை: க.வி.விக்னேஸ்வரன்!

பயங்கரவாத தடைச் சட்டமோ அல்லது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமோ தேவையற்றது. மக்களைப் பாதிக்கும் இந்த கொடிய சட்டங்கள் சட்டப் புத்தகத்திலே இருக்கத் தேவையில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.வீ. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

தன்னுடைய பதவிக்கு எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாமென்ற பயம் ஐனாதிபதிக்கு இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

யாழில் நேற்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் மேலும். தெரிவித்ததாவது..

பயங்கரவாத தடைச் சட்டமோ அல்லது அதற்கான் பதிலாக கொண்டு வரப்படுகிற பயங்கரவாத எதிரப்பு சட்டமோ இலங்கைக்கு தேவையில்லை.

ஏனேனில் கடந்த காலத்தில் ஜேவிபி கிளர்ச்சியின் போது கடந்த 78 ஆம் ஆண்டு தற்காலிகமாக கொண்டு வரபட்டதே பயங்கரவாத தடைச் சட்டம். அது சில காலம் மட்டும் தான் எனக் கூறி தற்காலிகமாக கொண்டு வந்திருந்தாலும் 44 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது.

ஆகவே பயங்கரவாத தடைச் சட்டமோ அல்லது எதிர்ப்புச் சட்டமோ தேவையற்றது. இந்தச் சட்டத்தால் தான் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். எனவே இப்போது அது தேவையற்ற சட்டம் தான்.

எனினும் பயங்கரவாதம் நாட்டில் இருப்பதாக சொல்லி புதிய புதிய சட்டங்களை அரசிற்கு ஆதரவாக கொண்டு வருகின்றனர். ஏனெனில் அரசாங்கத்தை எதிர்க்கிற போது அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அல்லது அடக்கி ஒடுக்குவதற்கு அல்லது தண்டனை வழங்குவதற்காக இந்தச் சட்டங்களை கொண்டு வருகின்றனர்.

ஆகவே எம்மைப் பொறுத்த வரையில் பல சாதாரண சட்டங்கள் இருக்கின்ற போது அதனைப் பயன்படுத்துவதை விடுத்து இத்தகைய கொடிய சட்டங்கள் தேவையற்றது.

அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் எமது மக்களை பயப்படுத்தி கஸ்ரப்படுத்தி தமது எதிரிகளை வேறு விதமாக கையாளும் வகையில் இத்த்தகய சட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்தாலும் அந்தச் சட்டங்கள் என்பது சட்டப் புத்தகத்திலே இருக்கத் தேவையில்லை என்று தான் கூறுகிறோம்.

அதே நேரத்தில் இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற புதிய சட்டத்தை கொண்டு வருவதும் பின்னர் விடுவது அல்லது தாமதிப்பது என மாறி மாறி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது.

இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதிலும் அயச தரப்பில் ஐனாதிபதி ஒரு கட்சியாகவும் ஏனையவர்கள் மற்றொரு கட்சியாகவும் இருக்கின்றனர். இதனாலேயே இந்த இழுபறி ஏற்பட்டு இருக்கலாம். ஆனாலும் இதனைக் கொண்டு தேவையற்றது தான்.

மேலும் இரு தரப்பு பிரச்சனைகளாலும் தன்னுடைய பதவிக்கு எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற பயம் ஐனாதிபதிக்கு இருக்கும். ஆகையினால் அதிகாரத்துடன் பதவில் இருப்பதற்காகவும் இந்த சட்டத்தை இழுத்து இழுத்து பயன்படுத்தலாமென்றார்.

– எஸ்.நிதர்ஷன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது

east tamil

மதுபோதையில் டிப்பர் செலுத்தியவரால் கொடூரம்: கிளிநொச்சியில் 2 வயது சிறுமி பலி!

Pagetamil

ரயில் டிக்கெட்டுக்கு பதிலாக முன்பணம் செலுத்திய அட்டை

Pagetamil

ஒரு கிலோ கோழி இறைச்சி இலஞ்சம் வாங்கியவர்கள் கைது!

Pagetamil

பரந்தனில் பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் விற்பனை கண்காட்சி

east tamil

Leave a Comment