26.5 C
Jaffna
December 26, 2024
Pagetamil
இலங்கை

க.பொ.த உயர்தர பரீட்சை பிற்போடப்படுவதால் ஏற்படும் விளைவுகள்: நிபுணர்கள் எச்சரிக்கை!

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பட்டப் படிப்புகளுக்கான வயது வரம்பு மீறப்பட்டு இலங்கை கல்வியில் நீண்டகால நெருக்கடி ஏற்படலாம் என கல்வி நிபுணர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளனர்.

பரீட்சைகளை ஒத்திவைப்பது குறித்து தீர்மானிக்கும் போது அந்த விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டுகளில், நாட்டில் ஏற்பட்ட கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, பரீட்சைகள் தாமதமானதுடன், பாடசாலைக் கல்வியும் சீர்குலைந்ததை கல்வி வல்லுநர்கள் நினைவு கூர்ந்தனர்.

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஜனவரி 2024 வரை ஒத்திவைக்கப்பட்டால்,
அந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவிருந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 மே மற்றும் ஜூன் வரை ஒத்திவைக்கப்பட வேண்டும். மற்றும்
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியீடு ஜூலை 2024 வரை தாமதமாகும். அத்துடன், 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் விண்ணப்பதாரர்களுக்கு இம்முறை போன்று கூடுதல் நேரம் வழங்கப்பட வேண்டும் என கல்வி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்படியானால், 2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை மீண்டும் டிசம்பர் 2024 அல்லது ஜனவரி 2025 வரை ஒத்திவைக்கப்படும் என்றும் இலங்கைக் கல்வியில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள பின்னடைவை சரிசெய்வது மேலும் தாமதமாகும் என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பரீட்சை ஒத்திவைப்பு, பாடசாலை பருவ அறிக்கை தாமதம், பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்க்க தாமதம், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் சிறிது நேரம் காத்திருக்க வேண்டிய நிலை, வகுப்பறைகளில் இட பிரச்னையும் ஏற்படுகிறது.
உயர்தரப் பிரவேசத்தில் தாமதம், வெளிநாட்டுப் பல்கலைக்கழக அனுமதி தாமதம், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் புலமைப்பரிசில் இழப்பு, அரச துறை ஆட்சேர்ப்பு தாமதம் போன்ற நீண்டகால விளைவுகளை சந்திக்க நேரிடும் என கல்வி நிபுணர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

18 வயதிலேயே பிள்ளைகள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும், ஆனால் பரீட்சைகள் பிற்போடப்பட்டதன் காரணமாக அந்த வயதும் மீறப்பட்டுள்ளதாக கல்வி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மனைவியை சுட்டுக்கொல்ல துப்பாக்கியுடன் தலைமறைவான திருகோணமலை கடற்படை சிப்பாய் கைது!

Pagetamil

பொது மன்னிப்பில் ரஷ்ய பெண்ணும் விடுதலை

Pagetamil

சுனாமி 20: ‘பேபி 81’ இற்கும் 20 வயது!

Pagetamil

மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது

east tamil

மதுபோதையில் டிப்பர் செலுத்தியவரால் கொடூரம்: கிளிநொச்சியில் 2 வயது சிறுமி பலி!

Pagetamil

Leave a Comment