26.1 C
Jaffna
December 12, 2024
Pagetamil
இலங்கை

கோட்டாபய கட்டுப்பாடு போட்ட பெண் விடுதியில் கொல்லப்பட்டார்!

யுத்த காலத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தனது சேவையை வழங்கிய பெண் மனநல ஆலோசகர் ஒருவர் தலங்கமவில் உள்ள விடுதி ஒன்றில் கழுத்து வெட்டப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுஜாதா முனசிங்க மானாபரன என்ற பெண்ணின் சடலம் நேற்று (4) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பெண் கடந்த ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி முதல் ஆண் ஒருவருடன் இந்த விடுதியில் தங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவரும் அந்த நபரும் காலையில் ஹோட்டல் அறையை விட்டு வெளியேறி மாலையில் திரும்பி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருவரும் செப்டெம்பர் 3ஆம் திகதி வழமை போன்று ஹோட்டல் அறைக்கு வந்துள்ளனர்.ஆனால் நேற்று (4) காலை அறையை விட்டு வெளியில் வரவில்லை. அறையில் இருந்து சத்தம் ஏதும் வராததால் ஹோட்டல் ஊழியர்கள் கதவை திறந்து பார்த்த போது அவரது சடலத்தை கண்டுள்ளனர்.

அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதும், கடந்த சில நாட்களாக அவருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த நபர் காணாமல் போயுள்ளார்.

ஹோட்டலில் பாதுகாப்பு கமெரா அமைப்பு பொருத்தப்பட்டிருந்தும் அது வேலை செய்யாததால், அந்த நபரை அடையாளம் காண, அருகில் உள்ள வீடுகள் மற்றும் நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமரா காட்சிகள் மற்றும் தொலைபேசி வலையமைப்பை ஆய்வு செய்யும் நடவடிக்கையில் பொலிசார் நேற்று ஈடுபட்டனர்.

தம்பதியினர் ஹோட்டலுக்கு வந்தபோது தங்கள் தேசிய அடையாள அட்டைகளையோ அடையாளச் சான்றோ எதையும் முன்வைக்கவில்லை. அவர்கள் பொய்யான தகவலை அளித்துள்ளதாக பொலிசார் கூறுகின்றனர். 1977ஆம் ஆண்டு பிறந்த ஒருவரின் அடையாள அட்டை இலக்கமென போலயான தேசிய அடையாள அட்டை இலக்கத்தை அந்த பெண் வழங்கியுள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. எனினும் இந்த பெண் 50 வயதுக்கு மேற்பட்டவர் என கண்டறியப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட பெண் 2003 ஆம் ஆண்டு முதல் இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு உளவியல் ஆலோசனை சேவைகளை வழங்கி வருவதாகத் தெரிகிறது.

இராணுவ வீரர்களை தவிர, இராணுவம் மற்றும் காவல்துறையின் உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அவர் ஒரு முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஒருவருக்கு நீண்ட காலமாக ஆலோசனை வழங்கியுள்ளார்.

அவர் தன்னை விட 10 வயது இளையவருடன் ஆலோசனை சேவைகளை வழங்குவதற்காக பயணம் செய்தார். இவர்கள் இருவரும் நாடு முழுவதும் உள்ள ஹோட்டல்களில் தங்கி ஆலோசனை வழங்குவதும், ஹோட்டல் கட்டணத்தை செலுத்தாமல் இருப்பது குறித்தும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் தங்களுடைய சேவைகளை வழங்கும் சம்பந்தப்பட்ட பொலிஸ் அல்லது இராணுவ முகாமில் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு ஹோட்டல்களிடம் கூறியுள்ளனர்.

அப்போது தனக்கு உதவியாளராக இருந்ததாக கூறப்பட்ட நபருடன் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதியாக ஆலோசனை சேவைகளை வழங்குவதற்காக வந்துள்ளதாகவே இந்த பெண் தெரிவித்துள்ளார்.

அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காதுகளுக்கு இந்தப் பெண்ணின் நடவடிக்கை பற்றிய தகவல் சென்றதும்,  இராணுவ முகாம்களுக்குள் இந்தப் பெணட நுழைய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் இந்த பெண்ணின் உதவியாளர் என கூறிக்கொண்ட நபர் கொழும்பு நகரமண்டப பகுதியில் உள்ள தொடர்பாடல் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியிருந்தார்.

தன்னை திருமணம் செய்து கொள்வதாக அந்த பெண் உறுதியளித்து பழகியிருந்தாலும், தற்போது தன்னை தவிர்ப்பதாக அந்த பெண்ணுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

அந்த சடலமாக மீட்கப்பட்ட அறையில் இராணுவ வீரர்களுக்கு அவர் அளித்த ஆலோசனை குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளின் நகல்களை பொலிசார் கண்டுபிடித்தனர். ஆனால், அவர் எங்கு வசிக்கிறார் என்பதை பொலிசார் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. பொலிஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சம்பூரில் பாலியல் துஷ்பிரயோகம் – பூசாரிக்கு 30 வருட கடூழிய சிறை!

east pagetamil

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைப்பு!

Pagetamil

நெற்றிக் கண்ணைத் திறத்தல்

Pagetamil

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் இறுதியானது!

Pagetamil

யாழில் 214 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

Pagetamil

Leave a Comment