கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் (முல்லேரியா வைத்தியசாலை) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அங்கு பணிபுரியும் பணிப்பெண் ஒருவரின் லொக்கரில் இருந்து ஐந்து ஐஸ் போதைப்பொருள் பொதிகளும் அவற்றை பொதி செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முல்லேரிய பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (28) வைத்தியசாலையின் பணிப்பாளர், கண்டெடுக்கப்பட்ட மருந்துகளை சீல் வைத்து முல்லேரிய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதன்படி வைத்தியசாலை பணிப்பாளர் விசேட வைத்தியர் பிரியந்த கருணாரத்ன உட்பட வைத்தியசாலை நிர்வாகத்தினர் பலர் முல்லேரிய பொலிஸாரிடம் வந்து இந்த பொருட்களை கையளித்து பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஊழியர் ஐஸ் போதைப்பொருள் கடத்துவதாக வைத்தியசாலைப் பணிப்பாளரிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் வைத்தியசாலை பணிப்பாளர் தலைமையில் குறித்த பணியாளரின் லொக்கரை திறந்து பார்த்த போது அதில் ஐஸ் போதைமருந்துகள் மற்றும் உபகரணங்களை கண்டெடுத்துள்ளனர்.