24.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
உலகம்

அமெரிக்காவில் கார் தரிப்பிடத்தில் காதலியின் கதையை முடிந்த இந்திய வம்சாவளி இளைஞன்!

அமெரிக்காவில் கார் தரிப்பிடத்தில் சீக்கிய வாலிபர் தனது காதலியை சுட்டு கொன்று விட்டு தப்பியோடிய நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.

கலிபோர்னியா மாகாணத்தில் ரோஸ்வில்லே பகுதியில் அமைந்துள்ள கேலேரியா வணிக வளாகத்தின், 5 அடுக்க வாகன தரிப்பிடத்தில் இந்த கொலைச்சம்பவம் நடந்தது.

சிம்ரன்ஜித் சிங் (29) என்ற சீக்கிய வாலிபர் தனது 34 வயது காதலியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த நபர், காதலியை துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.

பின்னர் அதே இடத்தில் துப்பாக்கியை போட்டு விட்டு தப்பியுள்ளார்.

சிங் சம்பவத்திற்கு பின்னர் ஷாப்பிங் செய்து, பணம் கொடுத்து சட்டை ஒன்றை வாங்கியுள்ளார். பின்பு புதிய சட்டையை போட்டு கொண்டு, பழைய சட்டையை தனது பையில் மறைத்து வைத்து கொண்டார்.

துப்பாக்கி சூடு நடந்தது தெரிய வந்ததும், அந்த பகுதியில் ஊரடங்கு நிலை ஏற்பட்டது. போலீசார் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தி குற்றவாளியை தேடினர்.

சாட்சிகள் மற்றும் கடைசியாக தாக்குதலில் ஈடுபட்ட நபர் சென்ற திசை உள்ளிட்ட பிற விவரங்கள் ஆகியவற்றை கொண்டு போலீசார், சிங்கை தேடி வந்தனர். இதன்பின் கண்காணிப்பு கேமரா உதவியுடன் சிங்கை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

சிங் ஜாமீன் இல்லாமல் கலிபோர்னியாவில் உள்ள பிளேசர் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டார். உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டதும், பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிடுவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விற்ற வீட்டில் புது ஓனருக்கு தெரியாமல் 7 ஆண்டுகள் வாழ்ந்த கில்லாடி பெண்

east tamil

இஸ்ரேலும் மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து விலகல்

east tamil

யூதர்களுக்கு ஆதரவாக மனித உரிமை பேரவையில் இருந்து விலகிய அமெரிக்கா

east tamil

திருநங்கைகள் விளையாட்டில் பங்கேற்க தடை – ட்ரம்ப்

east tamil

DeepSeek ஆபத்தானது

east tamil

Leave a Comment