25.7 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

யாழில் மதுபோதையில் குழப்பத்தில் ஈடுபட்ட 6 புலம்பெயர் தமிழர்களுக்கு விளக்கமறியல்!

மது போதையில் குழப்பம் விளைவித்த 6 புலம்பெயர் தமிழர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் இருந்த நான்கு பெண்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள், வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரைக்கு சென்று 24 ஆம் திகதி பொழுதை கழித்துள்ளனர்.

அதன் போது, அவர்களில் ஒருவரின் மோதிரத்தை காணவில்லை என, கடற்கரையில் கடமையில் இருந்த உயிர்காப்பு பிரிவை சேர்ந்த பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டு, அவர்களுடன் முரண்பட்டுள்ளனர்.

அது தொடர்பில் பொலிஸார் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, கடற்கரைக்கு விரைந்த பொலிஸார் 6 ஆண்களையும் 4 பெண்களையுமாக 10 பேரையும் கைது செய்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை 4 பெண்களையும் பிணையில் செல்ல அனுமதித்த மன்று, 6 ஆண்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஐந்து பேர் கனடா பிரஜைகள் எனவும், ஒருவர் பிரித்தானிய பிரஜை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சீகிரியாவில் வெளிநாட்டுப் பெண் திடீர் மரணம்

east tamil

தேசிய மக்கள் சக்தி நிர்வாக அலுவலகம் தாளையடியில் திறந்துவைப்பு

east tamil

நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம படகு

east tamil

வெலே சுதா, மனைவிக்கு 8 வருட சிறைத்தண்டனை!

Pagetamil

தாயை மிரட்டி யுவதியை கடத்திய காதலன் கைது

east tamil

Leave a Comment