26.3 C
Jaffna
January 14, 2025
Pagetamil
இந்தியா

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

மோடி பெயர் அவதூறு வழக்கில் காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 7 ஆம் தேதி நிராகரித்தது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டைனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

இருதரப்பு வாதங்கள்: ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது, அவரது சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிசேக் மனு சிங்வி, “நீதிபதி இதனை தார்மிக ஒழுக்கக் கேடான ஒரு கடுங்குற்றமாக பார்க்கிறார். இது ஒரு பிணையில் வரக்கூடிய குற்றமாகும். இந்தக் குற்றம் சமூகத்துக்கு எதிரானதோ, கடத்தலோ, பாலியல் வன்கொடுமையோ, கொலைக் குற்றமோ இல்லை. அப்படியிருக்கையில், இது எப்படி தார்மிக ஒழுக்கக் கேடான குற்றாமாகும்?

ஜனநாயகத்தில் நமக்குள் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஜனநாயகத்தில் நமக்குள் மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. ராகுல் காந்தி ஒன்றும் கொடுங்குற்றவாளி கிடையாது. பாஜக தொண்டர்களால் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், எதற்கும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. ராகுல் காந்தி ஏற்கெனவே இரண்டு நாடாளுமன்ற அமர்வுக்கு செல்லமுடியவில்லை” என்று வாதிட்டார்.

இதற்கு பதில் அளித்த புர்னேஷ் மோடி சார்பில் ஆஜரான மகேஷ் ஜெத்மலானி, “அந்த மொத்தப் பேச்சும் 50 நிமிடங்கள் நீடித்தன. தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களில் அதற்கான ஆதாரங்களும் வீடியோ பதிவுகளும் இணைக்கப்பட்டுள்ளன. ராகுல் காந்தி ஒட்டுமொத்த சமூகத்தையும் இழிவுபடுத்தியுள்ளார்” என்று வாதிட்டார்.

முன்னதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, ‘‘எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்’’ என்று கேள்வி எழுப்பினார். அவரது பேச்சு மோடி சமூகத்தினரை இழிவுப்படுத்துவதாக அமைந்துள்ளதாக கூறி குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் எம்.பி. பதவியில் இருந்து கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி தகுதியிழப்புக்கு ஆளானார். பின்னர் கீழ்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை செஷன்ஸ் நீதிமன்றமும் பிறகு குஜராத் உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. இந்நிலையில், 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘‘கடந்த ஜூலை 7ஆம் தேதி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்காவிட்டால், பேச்சுரிமை, கருத்துரிமையின் கழுத்தை நெரிப்பது போலாகும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு தொடர்பான விசாரணையின்போது, ராகுல் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், ‘‘ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ளார். சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், கடந்த 111 நாட்களாக அவரால் எம்.பி. பணிகளை செய்ய இயலவில்லை.

மேலும், அந்தத் தொகுதிக்கு தேர்தல் ஆணையம் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்க கூடும். எம்.பி. பதவி தகுதியிழப்பால் அவரால் கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க முடியவில்லை. தற்போது நடைபெறும் மழைக்கால கூட்டத் தொடரிலும் அவர் பங்கேற்க முடியவில்லை. எனவே, ராகுலுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை வைக்கிறேன்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் – இலங்கை அமைச்சர்கள் சந்திப்பு

east tamil

‘பெரியார் என்ன சமூகநீதி செய்தார்… பெண்ணுரிமை பேச பிரபாகரனுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது’- சீமான்

Pagetamil

5 ஆண்டுகளில் 64 பேரால் பாலியல் வன்கொடுமை: காதலனின் துரோகம் மாணவியின் வாழ்வை சிதைத்த கொடூரம்

east tamil

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை: தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

Pagetamil

“நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு சீமான் பாஜகவில் சேர வேண்டும்” – மாணிக்கம் தாகூர் எம்.பி.

Pagetamil

Leave a Comment