தங்க நகைகளை கொள்ளையடித்த ஒழுங்கமைக்கப்பட்ட பெண்கள் குற்றவியல் கும்பலைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (3) நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அநுராதபுரம் ருவன்வெளிசேயவில் சனிக்கிழமை (29) பூஜை மலர் அர்ச்சனை இடம்பெற்ற போது, நான்கு பக்தர்களின் தங்க நகைகளை இந்தக் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 மில்லியன் என தெரிவிக்கப்பட்டது.
சந்தேகநபர்கள் 18 மற்றும் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இவர்கள் வென்னப்புவ, கிளிநொச்சி, கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்களிடம் திருடப்பட்ட தங்க நகைகள் எதுவும் இல்லை எனவும், பெண் ஒருவர் போலியான பெயரில் தோன்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பக்தர்கள் அதிகம் கூடும் சமய விழாக்களில், வெள்ளை உடை அணிந்து வந்து, இடையூறு ஏற்படாத வகையில், வரிசையாக நின்று, தங்க நகைகளை திருடி செல்வதாக, போலீசார் தெரிவித்தனர். திருடப்பட்ட பொருட்கள் கையிலிருந்து கைக்கு மாற்றப்பட்டு, வரிசையின் முடிவில் இருக்கும் கும்பல் உறுப்பினர் அதை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு நழுவுகிறார்.
கைது செய்யப்பட்ட ஒன்பது பெண்களும் ஞாயிற்றுக்கிழமை (30) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 8 பெண்களும் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும், போலியான பெயரில் ஆஜராகிய சந்தேக நபரை ஓகஸ்ட் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.