போதையில் தனியார் பேருந்தை செலுத்தியவரின் சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்துக்கு இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு மாத சிறைத்தண்டனையும் விதித்து பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (13) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பருத்தித்துறை- கொடிகாமம் மார்க்கத்தில் நேற்று சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஒன்றின் சாரதி, மதுபோதையில் நிதானமில்லாமல் பேருந்தை செலுத்தியதை அவதானித்த நெல்லியடி போக்குவரத்து பொலிசார் அவரை கைது செய்தனர்.
சாரதி இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகிய போது, அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை 12 மாதங்களுக்கு இரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
அத்துடன், போதையில் வாகனம் செலுத்திய சாரதிக்கு ஒரு மாத சிறைத்தண்டனையும் விதித்தார்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
1
+1