நீர்கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு தென்கடலில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த இலங்கையின் பலநாள் மீன்பிடி கலன் ஒன்றின் மீது, இந்தோனேசிய பலநாள் கலனிலிருந்தவர்கள் நடத்திய பெற்றோல் குண்டுத் தாக்குதலில் தீக்காயமடைந்த கடற்தொழிலாளர் நேற்று இரவு இலங்கையின் டோரா கப்பலில் காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலையைச் சேர்ந்த 33 வயதுடையவரே தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
கடந்த 22ஆம் திகதி, காயமடைந்தவர் உள்ளிட்ட குழுவினர், சசிந்த சுவா என்ற பல நாள் கலனில் கடலுக்குச் சென்று, தென் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, இந்தோனேஷியாவின் பல நாள் கலன் பெட்ரோல் குண்டுத் தாக்குதலை நடத்தியது. .
காயமடைந்தவர், நாட்டின் கடற்பரப்பில் பயணித்த கப்பலொன்றில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் அந்தக் கப்பல் மூலம் தென் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கடற்படையினர், காயமடைந்தவரை டோரா படகின் மூலம் நேற்று இரவு காலி துறைமுகத்திற்கு கொண்டு வந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தனர்.