வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி 19.2 மில்லியன் ரூபாய் பண மோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளரைக் கைது செய்வதற்காக மிரிஹன குற்றப்புலனாய்வு விசேட பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வீடுகளை கட்டித் தருவதாகக் கூறி 1,92,15,000 ரூபாய் ஏமாற்றியதாக குறித்த சந்தேக நபருக்கு எதிராக 14 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார் அவரின் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபரைரைக் கண்டால் நுகேகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை 0718591641 என்ற எண் மூலமும் மிரிஹன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை 01122852556 அல்லது 0718137373 என்ற எண் மூலமும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1