திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த. தொலைத் தொடர்பு கோபுரம் விழுந்ததில் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த சம்பவம் இன்று (04) பிற்பகல் இடம் பெற்றுள்ளது.
வேகமாக வீசிய காற்றினால் கந்தளாயில் நிர்மாணிக்கப்பட்டிருந்த எஸ் எல் டி மொபிடல் நிறுவனத்துக்கு சொந்தமான தொலைதொடர்பு கோபுரமே தபால் கந்தோர் அலுவலகத்தில் விழுந்துள்ளதாகவும் அங்கு கடமையாற்றிய ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
காயமடைந்த ஐந்து பேரும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
குறித்த பகுதியில் சில தொலைத் தொடர்பு சேவை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
தற்போது காற்றின் வேகம் அதிகரித்துள்ளமையினால் இவ்வனர்த்தம் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிய வருகிறது.
-அப்துல்சலாம் யாசீம்-