25.3 C
Jaffna
January 16, 2025
Pagetamil
இலங்கை

மேலும் 5 மரணங்கள்!

கொரோனா தொற்றினால் மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (21) உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்மூலம், நாட்டில் உறுதி செய்யப்பட்ட கொரொனா மரணங்களின் எண்ணிக்கை 630 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அறிவிக்கப்பட்ட கொரோனா மரணங்களின் விபரம் வருமாறு-.

செவணகல பிரதேசத்தைச் சேர்ந்த, 75 வயதான ஆண் ஒருவர், எம்பிலிபிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பு நிலை மற்றும் குருதி விஷமடைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த, 80 வயதான ஆண் ஒருவர், கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கடந்த 19ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, மாரடைப்பு மற்றும் உக்கிர சிறுநீரக சிதைவடைவு நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

களனி பிரதேசத்தைச் சேர்ந்த, 57 வயதான ஆண் ஒருவர், கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (20) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, குருதி விஷமடைவு அதிர்ச்சி மற்றும் உக்கிர சிறுநீரக சிதைவடைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த, 66 வயதான ஆண் ஒருவர், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கடந்த 19ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, நீரிழிவு நிலை மற்றும் குருதியில் இலிப்பிட்டு மட்டம் உயர்வடைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த, 39 வயதான ஆண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (20) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா நிலையினால் ஏற்பட்ட குருதி விஷமடைவு அதிர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

அர்ச்சுனாவை தகுதி நீக்கும் வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Pagetamil

மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் ஆணின் சடலம்: விசாரணைகள் தீவிரம்

east tamil

தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுவியுங்கள் – மனோ கணேசன் எம்பி

east tamil

இன்று காலை வரையான 24 மணித்தியாலத்தில் பதிவான மழைவீழ்ச்சி விபரம்

Pagetamil

Leave a Comment