சூதாட்டத்திற்காக பெற்ற வாங்கிய கடனை அடைக்க முடியாமல், கடன் வழங்கியவரிடம் தனது 16 வயதான மகளை இரகசியமாக விற்பனை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை செல்லும் இந்த சிறுமி கடந்த ஒரு வருடமாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு வந்துள்ளார்.
சிறுமியின் தாயாருக்கு தெரியாமலே இந்த சம்பவங்கள் நடந்துள்ளன.
அகலவத்தை பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் நடந்தது.
சிறுமிக்கு இரகசியமாக வழங்கப்பட்ட கைய்க்க தொலைபேசியை தாயார் கண்டெடுத்ததை தொடர்ந்தே இந்த குற்றச்சம்பவம் வெளிப்பட்டது.
சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரை மாமனாரும் 2 வருடங்களின் முன் துஷ்பிரயோகம் செய்தது தெரிய வந்தது.
சந்தேகநபரான தந்தை நேற்று (30) மாலை கைது செய்யப்பட்டதையடுத்து மாமாவும், கடன் கொடுத்தவரும் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான சந்தேகநபர் கடந்த சில காலமாக தனது இல்லத்தில் இரகசியமாக சூதாட்ட விடுதி ஒன்றை நடத்தி வந்ததுடன், கலவானை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய திருமணமான ஒருவர் அவ்வப்போது வீட்டுக்கு வந்து சூதாட்டத்துக்கு கடன் கொடுத்து வந்துள்ளார்.
கடனை அடைக்க முடியாத தந்தை, கடனை தள்ளுபடி செய்யும் படியும், பதிலாக மகளை தருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, கடந்த ஒருவருடமாக கடன் கொடுத்தவர் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்கி வந்துள்ளார்.