நாட்டில் ஏற்பட்டுள்ள டெங்கு நுளம்பு பெருக்கத்தை தடுக்கும் முகமாக காரைதீவு பிரதேச செயலக சமூக சேவைப்பிரிவு, அனர்த்த முகாமைத்துவப்பிரிவு மற்றும் உளவளப் பிரிவு உத்தியோகத்தர்களின் ஆதரவு மற்றும் பங்குபற்றலுடன் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையொன்று பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது.
கிராம உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைப்புடன் இன்று காரைதீவு 01 மற்றும் காரைதீவு 06 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் நடைபெற்றது.
இதன்போது ஆலயத்தை சூழவுள்ள வடிகான்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டன. இச் சிரமதானத்தில் காரைதீவு பிரதேச செயலக அதிகாரிகள் பலரும் கலந்து ஆதரவு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1