25.4 C
Jaffna
January 14, 2025
Pagetamil
இலங்கை

மத கலவரங்களை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை!

நாட்டில் இன அல்லது மத முரண்பாடுகள் மீண்டும் தலைதூக்காமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு மற்றும் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் குணவர்தன, பல்வேறு தரப்பினரிடையே முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கும் குழுக்கள் தொடர்பில் சில புலனாய்வு தகவல்கள் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

இனக்கலவரங்கள் மற்றும் ஏனைய பயங்கரவாத செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள நாடு என்ற வகையில், வன்முறையை தூண்டும் நபர்களை தடுக்க கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமென அவர்கள் கருதுவதாக அமைச்சர் கூறினார்.

அனைத்து சமூகங்களும் இணைந்து வாழ்வதற்கான அமைதியான சூழலை உறுதி செய்வதற்கு தேவையான உத்தரவுகளை அரச தலைவரினால் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரயிலில் தவறவிடப்பட்ட பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

east tamil

முல்லைத்தீவில் வினோதமான திருட்டு

east tamil

UPDATE: ‘மாமா பணத்தை தராததால் மாணவியை கடத்தினேன்’: மச்சான் கூறிய காரணம்!

Pagetamil

ரோஹிங்கிய முஸ்லிம் தொடர்பில் மீள குற்றப்புலனாய்வு விசாரணை

east tamil

தமிழ் மக்களின் போர்க்கால வாழ்க்கையை ஆவணமாக்கியவர் காலமானார்!

Pagetamil

Leave a Comment