26.9 C
Jaffna
January 27, 2025
Pagetamil
இலங்கை

விதைப்பை வெட்டப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதி!

எம்பிலிபிட்டிய, பென்முவ பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரின் விதைப்பை ஒன்று வெட்டப்பட்டதால் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று (30) காலை ஊருபொக்க பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

பெங்கமுவ, தபோகல வீதியில் வசிக்கும் 53 வயதுடைய திருமணமாகாத ஒருவரே படுகாயமடைந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று முன்தினம் (29) இரவு மேலும் மூவருடன் மது அருந்தியதாகவும், பின்னர் இவரும் மேலும் இருவர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மறுநாள் காலை மது அருந்திக் கொண்டிருந்த வீட்டின் உரிமையாளர் கதவைத் திறந்து பார்த்தபோது, ​​வீட்டின் முன் இந்த நபர் படுத்திருப்பதைக் கண்டுள்ளார்.

வீட்டின் உரிமையாளர் ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

இதனடிப்படையில், அவருடன் மது அருந்திய வீட்டின் உரிமையாளரும் ஏனைய இருவரும் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பெப்ரவரி 4 கரிநாளாக பிரகடனப்படுத்த அழைப்பு!

Pagetamil

மஹிந்தவுக்கும் வீட்டுத்திட்டத்தில் வீடு வழங்கப்படலாம்!

Pagetamil

யோஷித ராஜபக்ஷ இன்று மீண்டும் நீதிமன்றத்தில்

Pagetamil

கட்டைக்காடு குப்பை மேடாக மாறியதால் மக்கள் அவதி

east tamil

யாழ் பல்கலைக்குள் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள்… இரவில் தொங்கும் பெண்களின் உள்ளாடைகள்- கலைப்பீடாதிபதி பதவிவிலகலுக்கு இதுதான் காரணமா?

Pagetamil

Leave a Comment