பேருவளை, சீனக்கோட்டை நளின் ஹாஜியார் மாவத்தை பகுதியில் நபர் ஒருவர் கடந்த 15ஆம் திகதி மலேரியா நோயினால் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
மலேரியா இல்லாத நாடாக இலங்கை அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.
37 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞருக்கு கடுமையான மலேரியா நோய் இருப்பதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1