யாழில் பாடசாலை ஆசிரியரின் பெயரில் சிறுமிக்கு தொலைபேசி வழியாக பாலியல் தொல்லை கொடுத்த மர்ம நபரை கண்டறிய பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இன்று இந்த சம்பவம் நடந்தது.
இன்று காலை பாடசாலை சிறுமியொருவரின் பெற்றோருக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆசிரியர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர் பேசுவதாக தெரிவித்து, மாணவிக்கு கணித பாடம் தொலைபேசி ஊடாக கற்பிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
பெற்றோர் மாணவியிடம் தொலைபேசியை கொடுத்த போது, தொலைபேசியில் தவறான பாலியல் நடத்தை கட்டளையிட்டுள்ளார். இது தொடர்பில் பெற்றோர் உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டனர்.
குறிப்பிட்ட ஆசிரியரை அழைத்து பொலிசார் விசாரணை நடத்தியபோது, இந்த சம்பவத்துக்கும் ஆசிரியருக்கும் தொடர்பில்லையென்பதும், ஆசிரியரை சிக்கலுக்குள் தள்ள யாரோ சதித்திட்டம் தீட்டி செயற்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
அந்த தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நபர் யார் என பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யாழில் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் மீது பெற்றோர் முறைப்பாடு!
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாஆசிரியர் ஒருவர் பொலிசாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.
யாழ்ப்பாணம்- புறநகர் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவரே, யாழ்ப்பாண பொலிசாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.
இன்று காலை ஆசிரியர் தொலைபேசியில் ஆபாசமாக பேசியதாக பெற்றோர் முறைப்பாடு செய்தனர்.
இன்று காலை 6 மணியளவில் பெற்றோரின் தொலைபேசிக்கு அழைப்பேற்படுத்திய ஆசிரியர், மாணவிக்கு தொலைபேசியில் கணிதம் கற்பிக்கப் போவதாகவும், அவரிடம் தொலைபேசியை கொடுக்குமாறும் குறிப்பிட்டதாக பெற்றோரின் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
மாணவியிடம் தொலைபேசியை கொடுத்த பின்னர், அவுட் ஸ்பீக்கரை நிறுத்தும்படி கூறியதாகவும், பின்னர் மாணவியை சில பாலியல் செயற்பாட்டில் ஈடுபடும்படி அறிவுறுத்தல்கள் வழங்கியதாகவும் பெற்றோர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, குறிப்பிட்ட ஆசிரியர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார். விசாரணையின் பின்னரே முறைப்பாட்டின் உண்மைத்தன்மை தெரிய வருமென பொலிசார் தெரிவித்தனர்.
(முன்னர் இந்த செய்தியில் மதபோதகரான ஆசிரியர் என குறிப்பிடப்பட்டிருந்தது. அது தவறானது. திருத்தத்திற்கு வருந்துகிறோம்)