Pagetamil
இலங்கை

வாள் வெட்டுக்காரன் வாகனத்தால் மோதிக் கொல்லப்பட்டாரா?: பளையில் நடந்த சினிமா பாணி பயங்கரம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்திரபுரம் பகுதியில், ஏ9 வீதியில் வாகனத்தால் மோதி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம், கொலைச்சம்பவம் என தெரிவிக்கப்படுகிறது. தன்னை வாளால் வெட்டியவர்கள் மீதே, காயமடைந்தவர் வாகனத்தால் மோதியுள்ளார்.

கடந்த 28ஆம் திகதி ஏ9 வீதியில் இந்திரபுரம் பகுதியில் வாகனத்தால் மோதிய நிலையில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

முகமாலையை சேர்ந்த திருபராஜ் (28) என்பவரே உயிரிழந்தார்.

அவர்களை வாகனத்தால் மோதியவர் பளை பொலிசாரிடம் சென்றார். அவரது உடலில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மோகன் (38) என்பவரே காயமடைந்தார்.

இந்த சம்பவம் நடப்பதற்கு சற்று முன்னதாக மோகனின் வீட்டிற்கு மதுபோதையில் சென்ற 3 பேர், அவருடன் தகராறில் ஈடுபட்டு, அவரை வாளால் வெட்டிக் காயப்படுத்தினர். தாக்குதலின் பின்னர் வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றனர்.

காயமடைந்த மோகன், தனது வாகனத்தை ஓட்டியபடி வைத்தியசாலைக்கு சென்ற போது, ஏ9 வீதியில் தன்னை தாக்கிய 3 பேரும் நிற்பதை கண்டார். இந்த சமயத்திலேயே விபத்து நடந்தது.

அவர்களை மோகன் வேண்டுமென்றே மோதினாரா அல்லது தற்செயல் விபத்தா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த 3 பேரும் மீண்டும் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் தனது வாகனத்தை மறிக்க முற்பட்ட போது, அவர்களை மோதியபடி நிற்காமல் வந்து விட்டதாக மோகன் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த இரண்டு பேர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் வாகனத்தை ஓட்டி வந்த மோகன் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் உடலில் வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வவுனியா விபத்தில் யாழ் இளைஞர் பலி

Pagetamil

முன்னாள் சிப்பாய் குடும்பத்துடன் உண்ணாவிரதம்!

Pagetamil

எரிந்த வண்டியிலிருந்தது கோடீஸ்வர வர்த்தகரின் சடலமா?

Pagetamil

மஹிந்த மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் முயற்சியா?; புதிதுபுதிதாக கதைவிடும் ராஜபக்ச குழு: அரசாங்கம் விளக்கம்!

Pagetamil

ஊடகவியலாளரை கடத்த முயற்சி!

east tamil

Leave a Comment