கோயில் மணி தலையில் விழுந்ததால் படுகாயமடைந்த முதியவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (17) காலை மட்டுவில் பகுதியில் உள்ள வைரவர் கோயிலொன்றில் இந்த விபத்து நிகழ்ந்தது.
காலை வேளையில் கோயில் பூசைக்கு சென்ற முதியவர், மணியை அடித்த போது, அது அறுந்து அவரது தலையில் விழுந்துள்ளது.
இதில் படுகாயமடைந்த முதியவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1