24.5 C
Jaffna
January 15, 2025
Pagetamil
உலகம்

ஈரானிலிருந்து ஹூதிகளுக்கு அனுப்பப்பட்ட ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா திட்டம்!

ஈரானிலிருந்து ஹூதி போராளிகளிற்கு அனுப்பப்பட்ட போர் அமெரிக்க நேச நாடுகளால் கைப்பற்றப்பட்ட  ஆயுதங்கள் மற்றும்  வெடிமருந்துகளை உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி செவ்வாயன்று வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் இதனை தெரிவித்துள்ளது.

அறிக்கையின்படி, யேமன் கடற்கரையில் ஈரானுக்காக பணிபுரிவதாக சந்தேகிக்கப்படும் கடத்தல்காரர்களிடம் இருந்து சமீப மாதங்களில் கைப்பற்றிய 5,000 க்கும் மேற்பட்ட தாக்குதல் துப்பாக்கிகள், 1.6 மில்லியன் சிறிய ஆயுத வெடிமருந்துகள், ஒரு சிறிய எண்ணிக்கையிலான டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை உக்ரைனுக்கு  அனுப்புவது குறித்து அமெரிக்க அதிகாரிகள்பரிசீலிக்கிறார்கள்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை உக்ரைனுக்கு மாற்றுவதற்கான சட்டப்பூர்வ நியாயத்தை கண்டுபிடிப்பது பிடன் நிர்வாகத்திற்கு சவாலாக உள்ளது, ஏனெனில் ஐ.நா ஆயுதத் தடையில் கையெழுத்திட்ட அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அவற்றை அழிக்க, சேமித்து அல்லது அப்புறப்படுத்த வேண்டும்.

பிடன் நிர்வாக வழக்கறிஞர்கள், இடமாற்றத்தை அனுமதிக்கும் சட்ட ஓட்டை ஏதேனும் உள்ளதா என்பதை ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.

ஈரான் யேமனுக்கு ஆயுதங்களை கடத்துவதைத் தடுப்பதில் கவனம் செலுத்தும் உலகளாவிய முயற்சியின் ஒரு பகுதியாக அமெரிக்கா மற்றும் பிரான்சால் சமீபத்திய மாதங்களில் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று அறிக்கை கூறுகிறது.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஈரான் ஆதரவு போராளிகளை தோற்கடிக்க முயற்சிக்கும் யேமன் படைகள் மீதான தாக்குதல்களில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகள், ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை ஹூதிகளுக்கு ஈரான்  வழங்கியதாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் குற்றம் சாட்டியுள்ளன.

ஈரான் பகிரங்கமாக ஹூதிகளை அரசியல் ரீதியாக ஆதரிக்கிறது, ஆனால் ஐ.நா தீர்மானங்களை மீறி எந்த ஆயுத பரிமாற்றத்தையும் மறுக்கிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊழல் குற்றச்சாட்டில் இங்கிலாந்து அமைச்சர்

east tamil

ஜப்பானில் வாடகை நண்பர் – கோடிகளில் சம்பளம்

east tamil

இந்து மதம் மாறுகிறார் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் பாவல்?

Pagetamil

உயிருடன் சிக்கினால் தற்கொலை செய்யுங்கள் – கிம் ஜாங் உத்தரவால் அதிர்ச்சி

east tamil

இதுவரை 24 பேரை பலிகொண்ட லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ – உருவானதும் பரவியதும் எப்படி?

Pagetamil

Leave a Comment