25.8 C
Jaffna
December 12, 2024
Pagetamil
இலங்கை

13ஐ தேடி யாழ்ப்பாணம் வந்த பௌத்த பிக்குகள்!

13வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதால் உள்ள சாதக பாதகங்களை அறிய பௌத்த துறவிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது,

மூன்று பௌத்த பீடங்களை சேர்ந்த மகாநாயக்க தேரர்கள்உள்ளடக்கிய 20 பௌத்த துறவிகள் அடங்கிய குழு யாழ்ப்பாண சர்வ மத குழுவின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் மக்களின் நிலைப்பாடு மற்றும் அது வடக்கு கிழக்கில் எவ்வகையான தாக்கத்தை செலுத்தும், அதனை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் சாதக பாதக விடயங்கள் தொடர்பில் மதத் தலைவர்கள் சமூகமட்ட பிரதிநிதிகளின் கருத்துக்களை அறிவதற்காக குறித்த விஜயம் அமைந்துள்ளது.

இன்று காலை கியூடெக் அமைப்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள மதத் தலைவர்கள் மற்றும் சமூக மட்ட பிரதிநிதிகள்உடனான விசேட சந்திப்பில் கலந்து கொள்ள உள்ளதோடு அதன் பின்னர் 4 மணிக்கு வட மாகாண ஆளுநர் மற்றும் வடக்கில் செயற்படும் அரச அதிகாரிகளுடன் குறித்தகுழு சந்திப்பில் ஈடுபட உள்ளதோடு மத தலைவர்களையும் தனித்தனியாக சந்திக்க உள்ளதாகவும் யாழ்ப்பாண சர்வ மத குழுவின் இணைப்பாளர் அருட்தந்தை டிக்சன் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலையில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்.

east pagetamil

சம்பூரில் பாலியல் துஷ்பிரயோகம் – பூசாரிக்கு 30 வருட கடூழிய சிறை!

east pagetamil

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைப்பு!

Pagetamil

நெற்றிக் கண்ணைத் திறத்தல்

Pagetamil

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் இறுதியானது!

Pagetamil

Leave a Comment