வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கும் தமிழ்த் தரப்புக்கும் இடையே ஆரம்பித்துள்ள இப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட பேச்சுவார்த்தையின் போது ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ்க் கட்சிகளையும் தீர்வுத்திட்ட விடயத்தில் ஒருங்கிணையச்செய்வதை வலியுறுத்தி, “ஒன்றிணைவோம் ஒருமித்த குரலினை உரக்கச்சொல்வோம்” எனும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு மாகாணமெங்கும் கடந்த வியாழனன்று (5) ஆரம்பித்த போராட்டத்தின் 3 ஆம் நாளான இன்றும் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக சமூக செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் இணைந்து 3 வது நாளாகவும் தமது கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்தி வருகின்றனர்.
இப் போராட்டமானது எதிர்வரும் 10ம் திகதிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.