26.5 C
Jaffna
December 26, 2024
Pagetamil
இலங்கை

பருத்தித்துறையில் 2 வருடங்களாக சிறுமி பாலியல் வன்புணர்வு: பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் 19 வயதான யுவதியொருவரை இரண்டு வருடங்களாக பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தன்னை இரண்டு வருடங்களாக பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கி, வீடியோ படம் எடுத்து மிரட்டியதாகவும், அதனை பிரதேச இளைஞர்களிடம் பகிர்ந்ததாகவும், பிரதேச இளைஞர்களும் தன்னை வல்லுறவிற்குள்ளாக்க முயன்றதாகவும்  யுவதியொருவர் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து, பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை நகரை அண்மித்த பகுதியொன்ரற சேர்ந்த சிறுமியொருவரே 2 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

இரண்டு வருடங்களின் முன்னர் நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து, அப்போது 17 வயதாக இருந்த சிறுமியை இரண்டு தமிழ் பொலிசார் அழைத்துச் சென்றுள்ளனர். ஆட்களில்லாத வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கியுள்ளனர்.

அதனை காணொலியாக பதிவு செய்து, அதை வைத்து மிரட்டி, கடந்த 2 வருடங்களாக தொடர் வல்லுறவிற்குள்ளாக்கி வந்துள்ளனர்.

தற்போது 19 வயதாகியுள்ள அந்த யுவதி, கடந்த வியாழக்கிழமை திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் அடிப்படையிலும், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையிலும், அவர் 2 வருடங்களாக பாலியல் வன்புணர்விற்குள்ளாகியது தெரிய வந்தது.

இதையடுத்து, நடைபெற்ற விசாரணையில், சம்பவம் நடைபெற்ற போது சந்தேகநகரான பொலிஸ் உத்தியோகத்தர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திலும், பின்பு தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திலும், தற்போது முருங்கன் பொலிஸ் நிலையத்திலும் கடமையாற்றுவது தெரிய வந்தது.

அந்த சந்தேகநபர், சிறுமியை வன்புணர்விற்குள்ளாக்கிய போது எடுத்த வீடியோவை பாடசாலை மாணவர்களிற்கும் வழங்கியுள்ளார்.

தம்மிடமும் வீடியோ இருப்பதாக தெரிவித்து, மாணவர்கள் சிலரும் அந்த சிறுமியை வன்புணர்விற்குள்ளாக்கி முயன்றதும் தெரிய வந்துள்ளது.

கைதான பொலிஸ் உத்தியோகத்தர் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றை வசிப்பிடமாக கொண்டவர். அவருடன் இணைந்து வல்லுறவிற்குள்ளாக்கிய மற்றைய நபர், சிறுமியின் வாக்குமூலத்திலிருந்து அடையாளம் காணப்படவில்லை.

அடையாளம் காணப்பட்ட சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தர் இன்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

விசாரணைக்கு சமூமளித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மனைவியை சுட்டுக்கொல்ல துப்பாக்கியுடன் தலைமறைவான திருகோணமலை கடற்படை சிப்பாய் கைது!

Pagetamil

பொது மன்னிப்பில் ரஷ்ய பெண்ணும் விடுதலை

Pagetamil

சுனாமி 20: ‘பேபி 81’ இற்கும் 20 வயது!

Pagetamil

மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது

east tamil

மதுபோதையில் டிப்பர் செலுத்தியவரால் கொடூரம்: கிளிநொச்சியில் 2 வயது சிறுமி பலி!

Pagetamil

Leave a Comment