நுரைச்சோலையில் நேற்றிரவு போதையில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக போதையில் இருந்த நபர் ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நுரைச்சோலையைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் மாம்புரிய பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபராவார்.
கைது செய்யப்பட்ட நபர் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1