வட்டு யாழ்பாணக் கல்லூரியை கோல்மழை பொழிந்து வீழ்த்தி பிக்னல் ஞாபகார்த்த கிண்ணத்தை சுவீகரித்தது சென்.பற்றிக்ஸ் கல்லூரி.
வட்டுக்கோட்டை யாழ்பாணக் கல்லூரிக்கும் யாழ் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் பலதசாப்த காலங்களாக இடம்பெற்று வரும் பிக்னல் ஞாபகார்த்த கால்பந்தாட்ட கிண்ணத்தை இவ்வருடம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி தனதாக்கி கொண்டது.
நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3மணியளவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பிக்னல் மைதானத்தில் இடம்பெற்ற 14,16,18 வயதிற்குட்பட்ட அணிகளிற்கான போட்டியில் வட்டுக்கோட்டை யாழ்பாணக்கலூரியை சென்.பற்றிக்ஸ் அணி வெற்றிகண்டது.
பிக்னல் ஞாபகார்த்த கிண்ணத்திற்கான 20வயது பிரிவிற்குட்பட்ட போட்டியில் டெஸ்வின் தலைமயிலான சென்.பற்றிக்ஸ் அணியும் தனுஸ்ரன் தலைமையிலான வட்டு யாழ்ப்பாணக் கல்லூரி அணிகளும் மோதிய நிலையில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி எதுவித கோல்களையும் பெறாத நிலையில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி 8 கோல்களை பெற்று அபார வெற்றியடன் கிண்ணத்தை தனதாக்கி கொண்டது.
இதன் பொழுது சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் சார்பில் ஜெறோம் நான்கு கோல்களையும், றெக்ஸ்மன், சைனுஜன், வசோன், லியோ தலா ஒரு கோல்களையும் கல்லூரிக்கான பெற்றுக்கொடுத்தனர்.
கடந்த இரண்டு வருடங்களின் பின்னர் குறித்த போட்டி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.