தெஹிவளை ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியில் எதிரே வந்த ரயிலில் மோதி 22 வயதுடைய பெண்ணும் 22 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
தெஹிவளை விலங்கியல் பூங்காவை பார்வையிடுவதற்காக பலப்பிட்டிய தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் 12 பேர் கொண்ட குழு தெஹிவளை வந்தபோது இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.
களுத்துறை நோக்கிச் சென்ற மருதானை புகையிரதத்தில் மோதுண்ட குழுவில் உள்ள மூன்று மாணவர்கள், தண்டவாளத்தைக் கடப்பதற்கு மேம் பாலத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ரயில் பாதையின் குறுக்கே நடந்து சென்றுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1