இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 1,68,912 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1,35,27,717 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. இதன் மூலம் உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 904. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,70,179 -ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,21,56,529 ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 12,01,009 பேர் சிகிசையில் இருக்கிறார்கள். இந்தியாவில் 10,45,28,565 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.