கிளிநொச்சி பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் பொதுமக்களை தாக்கி, கொள்ளையடித்து வந்த குற்றக் கும்பலைச் சேர்ந்த 6 பேரை கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் தொடர்பில் தெரியவந்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பணம் திருடுதல், மோட்டார் சைக்கிள் திருடுதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் 21-32 வயதுடைய கிளிநொச்சி மற்றும் அக்கராயன்குளத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று (4) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1